சிவாஜி மணிமண்டப விழா குறித்து ட்வீட் செய்த கமல்

82

சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் நேற்று திறந்து வைத்தார். வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக் குமார், கடம்பூர் ராஜு, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.

பரபரப்பாக நடைபெறும் தமிழக அரசியல் சூழலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அதிமுக தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், இந்த விழாவைப் பற்றி நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “செவாலியே சிவாஜி அவர்களது மணிமண்டப விழா இனிதே நடைபெற்றது. சிவாஜி ஐயா அவர்களுக்கு இதைப் போலவும் இதைவிடப் பெரிதாகவும் நாங்கள் செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.