தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

166

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.