சரசரவென சம்பளத்தை உயர்த்திய ஓவியா

378

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமா மற்றும் விளம்பர பட வாய்ப்புகள் பெருகுவதால் தனது சம்பளத்தை சரசரவென உயர்த்தியிருக்கிறார் ஓவியா.

சினிமாவில் தடுமாற்றமான நிலையில் இருந்த ஓவியாவுக்கு; பிக்பாஸ் நிகழ்ச்சி புது வாழ்க்கையை வழங்கியுள்ளது. அவருக்கு கிடைத்திருக்கும் இந்த திடீர் கிரேஸ்; சினிமா மற்றும் விளம்பர பட வாய்ப்புகளை வாரி வழங்குகிறது. இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஓவியாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்கப் போட்டி போடுகின்றனர்.

ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா3, யாமிருக்க பயமேன் பட இயக்குநர் டி.கே இயக்கத்தில் காட்டேரி மற்றும் விஜய் வரதராஜ் இயக்கத்தில் பல்லு படாமாப் பாத்துக்க ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஓவியா.

அதேபோல, துணிக்கடை, நகைக்கடை திறப்பு விழாக்களுக்கும் நிறைய ஆஃபர்ஸ் வருகிறது. இந்த திடீர் செல்வாக்கை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த நினைத்த ஓவியா, தனது சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஓவியா, சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். இதற்காக அவர், ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல, சினிமாவிலும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியிருக்கிறார் ஓவியா.