ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல் தீவிர ஆலோசனை

63

சென்னையில் நடிகர் கமல் ஹாசன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அரசியலுக்கு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வந்துள்ளது.

தீவிர அரசியலுக்கு விரைவில் வர இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறி வரும் நிலையில், இன்று அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனது ரசிகர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் இதில் கலந்துள்ளனர். அரசியலுக்கு வருவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. மேலும், கமல் ஹாசன் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.