புதிய தீவிரவாத தடுப்பு சட்டத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்

538

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நேற்று புதிய தீவிரவாத தடுப்பு சட்டமானது நிறைவேற்றப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்ஸ் நாடு தீவிரவாதிகளின் இலக்காக மாறி உள்ளது. அங்குத் தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்கள் மக்களை எப்போதும் ஒரு அச்ச நிலையிலேயே வைத்துள்ளது. தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து சில அவரச கால நடவடிக்கைகளைக் கடந்த ஓராண்டு காலமாக அந்நாட்டுச் செயல்பாட்டில் வைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது புதிய தீவிரவாத தடுப்பு சட்டமானது நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இந்தச் சட்டமானது நிறைவேற்றப்பட்டது. 415 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 19 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் தற்போது அமலில் உள்ள சில சர்ச்சைக்குரிய அவசரக்கால கட்டுப்பாடுகள் நிரந்தரமாக்கப்படும். இந்தச் சட்டம் குடிமக்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறது எனக் கூறி சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.