தாஜ்மஹாலை இடித்து விட்டால் யோகி அரசுக்கு ஆதரவு: ஆசம் கான்

106

தாஜ்மஹாலை இடித்து விட்டால் யோகி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஆசம் கான் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வெளியிட்ட சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து அம்மாநில அரசு தாஜ்மஹாலை நீக்கியுள்ளது. மீண்டும் சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் தாஜ்மஹாலை சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கான் தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

அவர் கூறியதாவது, “ஒரு முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இந்த முடிவை எடுத்ததை நான் மதிக்கிறேன். தாஜ்மஹால், செங்கோட்டை, குதுப்மினார், நாடாளுமன்றம் ஆகியவை அடிமைத்தனத்தின் சின்னமாக உள்ளன. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் சரியான முடிவை எடுத்துள்ளார். ஏன் தாஜ்மஹாலை சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்?. அதை இடித்து விட்டால்யோகி ஆதித்யநாத் அரசுக்கு ஆதரவு தெரிவிப்போம்” எண்று கூறியுள்ளார்.