ஐ.நா., சபையின் உயர் பதவியில் தமிழ்ப்பெண்

2845

ஐ.நா., சபையின் உலக சுகாதார நிறுவனத்தின் (டபிள்யு.எச்.ஓ.,) துணை இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த சௌம்யா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒருவரை சபையின் உலக சுகாதார நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தன. இதில், இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சௌம்யா சுவாமிநாதன் இப்பதவியைப் பெற்றுள்ளார். 58 வயதான சௌம்யா குழந்தைகள் நல மருத்துவர். மேலும், காச நோய்க்கான சிகிச்சையில் இவர் மிகவும் புகழ்பெற்றவர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ள சௌம்யா சாமிநாதன் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.