விவேகத்தை ஊதித்தள்ளிய மெர்சல்… மீண்டும் ஒரு புதிய சாதனை…!

75

மெர்சல் படத்தின் டீசர் வந்து பல சாதனைகளை முறியடித்தது. குறிப்பாக, குறைந்த நேரத்திற்குள் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட டீசர் என்ற விவேகத்தின் சாதனையை, ஓவர் நைட்டில் தவிடு பொடியாக்கியது மெர்சல். அதேநேரம் அதிகமான பேரால் டிஸ்லைக் செய்யப்பட்ட டீசராகவும் அது கருதப்பட்டது. இன்னொரு பக்கம் உலகத்திலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட டீசரும் மெர்சல்தான் என வியக்கும் வகையில் பல சாதனைகளை செய்திருந்தது.

இந்தநிலையில் மெர்சல் பட டீசரை விவேகத்துடன் ஒப்பிடுகையில் ஒரே ஒரு சாதனை மட்டுமே விவேகம் டீசர் வசமாக இருந்தது. அதாவது இதுவரை மொத்தமாகப் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கையில் விவேகம் டீசர் 22 கோடிகளைக் கடந்து இருந்தது. இப்போது அந்த சாதனையையும் மெர்சல் டீசர் முறியடித்திருக்கின்றது. அதாவது தற்போது மெர்சல் டீசரை இதுவரைக்கும் 24 கோடிக்கும் அதிகமான பேர் பார்த்து இருக்கின்றனர். அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டீசராக 34 கோடிகளுடன் இந்த பட்டியலிலே முதல் இடத்தில் இருப்பது ரஜினிகாந்த் நடித்த கபாலி டீசர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.