ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சலுகை நீட்டிப்பு – ரயில்வே

128

ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான சேவை கட்டணம் ரத்தானது, வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.

மத்திய அரசானது பணமில்லா பரிவர்த்தனை செய்ய, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிய இருந்த சேவைக் கட்டண ரத்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இதனை வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.