பெட்ரோல், டீசல் கலால் வரி ரூ.2 குறைப்பு!

56

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வரும் சூழலில், இன்று மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 என குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால், ஆண்டுக்கு சுமார் 26,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து பணவீக்கமும் கூடியதால், இந்த முடிவெடுத்துள்ளது அரசு. இதனால் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறையும்.