18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர் பதில்மனு தாக்கல்

78

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் இன்று பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த 20ம் தேதி நடைபெற்ற விசாரணையில், “தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த காரணம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அன்றைய விசாரணையின் முடிவில், இதுகுறித்து சபாநாயகர் அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிக்கையை சமர்ப்பிக்க சபாநாயகர் தரப்பில் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையானது இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சபாநாயகர் தரப்பில் 500 பக்கங்களுக்கு மேல் அடங்கிய பதில்மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் இதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் தரப்பு தெரிவித்துள்ளது.