கௌரி லங்கேஷ் கொலையாளி யார் என தெரியும்: கர்நாடகா

111

பிரபல கன்னட பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசேஷ கமிட்டியை கர்நாடக அரசு நியமித்தது. கொலையாளிகள் யார் என இன்னும் கண்டுபிடிக்காததை கண்டித்து, எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும், அம்மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கொலையாளிகள் யார் என கண்டுபிடித்து விட்டதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். கொலை செய்தது யார் என்ன என்ற விவரங்கள் எங்களுக்கு தெரியும். ஆனால், தற்போது அதை வெளியிட முடியாது. கொலையாளிகள் ஆதாரங்களை அழித்துவிடக் கூடும். எனவே தற்போதைக்கு எதையும் அறிவிக்க முடியாது. விசேஷ கமிட்டிக்கு பல துப்புகள் கிடைத்துள்ளன. அதை வைத்து போதிய ஆதாரங்களை சேர்த்து வருகின்றனர். ஆதரங்கைள ஏதாவது தவறு இருந்தால் வழக்கு நிற்காது. எனவே அதிகாரிகள் தீர விசாரித்து வருகின்றனர்” என்றார் அமைச்சர் ரெட்டி.