அமெரிக்காவே சோகத்தில் மூழ்கியுள்ளது – டிரம்ப் கவலை

82

லாஸ் வேகாஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அமெரிக்காவே சோகத்தில் மூழ்கியுள்ளது என அதிபர் டொனால்ட் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அதிபர் டிரம்ப் கூறுகையில், “இந்தச் சம்பவத்தால் அமெரிக்காவே சோகத்தில் இருக்கிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது சோகத்தில் அமெரிக்க மக்கள் அனைவரும் பங்கெடுத்துக்கொள்கிறோம்” என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 59 பேர் பலியாகியதோடு 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.