சசிகலாவை சந்திக்க புறப்பட்டார் தினகரன், நாளை சசிகலாவுக்கு பரோலா?

72

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சென்னையில் இருந்து சற்றுமுன் புறப்பட்டுள்ளார்.

தன் கணவர் நடராஜன் உடல்நிலை சரியில்லாததால் சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இன்று அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக தகவல் வந்தன. இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் தற்போது பெங்களூருவில் உள்ள சசிகலாவை சந்திக்க புறப்பட்டுள்ளார். சசிகலா இன்று இரவு அல்லது நாளை பரோலில் வெளிவர இருப்பதாக தகவல் வந்துள்ளது. அது தொடர்பாக தான் தினகரன், சசிகலாவை பார்க்கச் செல்வதாக கூறப்படுகிறது.