செந்தில் பாலாஜியை தாக்கி பேசிய முதல்வர் – சொன்ன குட்டி கதை ..!!

60

கரூர், திருமாநிலையூரில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து நாங்கள் ஏதோ பெரிய தவறு செய்வதைப்போல இது அரசியல் என்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். பதில் அளிக்கவும் தேவையில்லை. பின்வாங்கவும் மாட்டோம்.

ஒரு கதையை உதாரணமாக கூறுகிறேன். ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருந்தது. எப்படியும் அக்கரைக்குப் போக வேண்டும் என நினைத்தபோது காளை ஒன்று பாய்ந்து நீந்தியது. அதன் வாலைப் பிடித்துக்கொண்டு அக்கரையை சிலர் அடைந்தனர். சிறிதுநேரத்தில் ஒரு ஆடு வந்து குதிக்க அதன் வாலைப் பிடித்தபடி நீந்தியவர்கள் நீந்தமுடியாமல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் போகஇவ்வாறு நினைத்த திசைவேறு; சென்ற இடம் வேறு. அதைப்போலத்தான் இப்போது சிலர் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கரூர் மாவட்டத்தில் ஒரு துரோகி (செந்தில் பாலாஜி) உள்ளார். நாங்களும் அவருக்கு துணைபோய் விட்டோம். அரவக்குறிச்சி இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தார். தேர்தல் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது என்னிடம் அவரை வெற்றி பெற வைத்துவிடாதீர்கள் என்றனர். நீங்கள் எண்ணியதுபோல் நடக்கமாட்டார் என்றனர். துரோகம் ஒன்றுதான் அவருக்கு தெரியும். எனினும் நாங்கள் தேர்தல் பணியாற்றினோம். அனைத்து நிர்வாகிகளும் சேர்ந்து அனைத்து வாக்குசாவடிக்கும் நிர்வாகிகளை நியமித்து 6 ஆயிரம் பேர் இரவு பகலாக அவரது வெற்றிக்காக உழைத்தோம்.

எங்களுக்கு அப்போது புரியவில்லை. இப்போது புரிய வைத்துவிட்டார். துரோகம் எப்போதும் மறையாது. நான் பேசக்கூடாது என நினைத்தேன். பேச வைத்துவிட்டார். மாவட்ட மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக பேசுகிறேன். இவ்வாறு பழனிசாமி பேசினார்.