தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை – ரஷ்ய அதிபர்

79

வரும் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் புடின் அளவுக்கு மக்கள் செல்வாக்கு நிறைந்த தலைவர் இல்லை என்ற கருத்து ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், தற்போதைய எதிர்கட்சி தலைவர் அலெக்ஜி நெவன்லி (Alexei Navalny) எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.