எல்லைகளில் ஒரே சமயத்தில் போர் வந்தாலும் அச்சமில்லை: விமானப்படைத் தளபதி

65

இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் ஒரே நேரத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் தனோவா தெரிவித்துள்ளார்.

இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியான காஷ்மீரில் தீவிரவாதிகள் இந்திய ராணுவ முகாம்களை தாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடியும் கொடுத்து வருகிறது. அதேபோல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் டோக்லாம் பகுதியில் எல்லைப் பிரச்னை நடந்து வருகிறது. இந்த இரு எல்லைகளிலும் எந்நேரமும் போர் சூளும் அபாயம் நிலவுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் தனோவா கூறுகையில், “இந்தியா போருக்கு தயாராகவே உள்ளது. இந்திய எல்லைகளில் ஒரே சமயத்தில் போர் வந்தாலும் அச்சமில்லை. எந்தஒரு சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் ஒரே நேரத்தில் போர் நடக்கும் சூழ்நிலை வந்தால் அதை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயாராக உள்ளது. எதிரிமுகாம்களை கண்டறிந்து குறி வைத்து தாக்கும் பலம் விமானப்படைக்கு உள்ளது. சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்த பிறகு தான் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.