தமிழகத்தில் புயல் வராதாம்! வானிலை ஆய்வு மைய அதிகாரி தகவல்

138

தமிழகத்திற்கு மழை கொண்டுவரும் வடகிழக்கு பருவ மழை இந்த மாதம் தொடங்குகிறது. இதனால், வருகிற 7, 12 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. நேற்று சமூக வளைத்தளங்களில் இந்த செய்தி மிக வேகமாக பரவியது. இந்த தகவல் தவறானது என்றும் தமிழகத்தில் இப்போதைக்கு புயல் வர வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “தமிழகத்தில் இந்த மாதத்தில் இரண்டு புயல்கள் உருவாக இருப்பதாக பரவும் தகவல் உண்மையானது அல்ல. வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வந்தால் தான் மக்கள் நம்ப வேண்டும். எனவே தமிழகத்தை புயல்கள் தாக்கும் என பரவிய செய்தி ஒரு பொய்யான வதந்தி. மக்கள் அதை நம்ப வேண்டாம்.

மேலும், வடகிழக்கு பருவ மழையினால் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம். இதன் காரணமாக தமிழகத்தில் மழை அளவு அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.