தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்…19 ஆண்டுகளுக்குப் பின் நாளை கூடுகிறது

146

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடைசியாக கடந்த 1998-ல் நடந்தது. அதன்பின்னர் அந்தக் கட்சியில் சில கோஷ்டி மோதல்கள் உருவானது. தலைமை தாங்குவதில் ஏற்பட்ட குழப்பத்தாலும், புற அரசியல் காரணங்களாலும் தமிழகத்தில் தனது நிலையான செல்வாக்கைப் பெற முடியாமல் காங்கிரஸ் கட்சியானது வீழ்ச்சி பாதை நோக்கி சென்றது.

இந்தநிலையில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் புதிய பொதுக்குழு உறுப்பினர்களுடன் அந்தக் கட்சியானது பொதுக் குழு கூட்டத்தை நாளை நடத்த இருக்கின்றது.சென்னையில் உள்ள தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் நாளை காலை 11 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்குகிறார். சமீபத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் 658 பேர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தியை நியமிக்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.