இன்று பதவி ஏற்கிறார் புதிய ஆளுநர்

59

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள பன்வாரி லால் ப்ரோஹித் இன்று காலை பதவி ஏற்க உள்ளார்.

தமிழக ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்ற பின்னர், தமிழகத்திற்கு முழு நேர ஆளுநர் நியமனம் செய்யப்படவில்லை. மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுப்பு ஆளுநராகக் கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக உடனடியாக தமிழகத்திற்கு முழு நேர ஆளுநர் நியமனம் செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்தது.

இதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கு பிறகு கடந்த வாரம் பன்வாரி லால் ப்ரோஹித்தை தமிழக ஆளுநராகக் குடியரசு தலைவர் நியமனம் செய்தார். புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட அவர் நேற்று மதியம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை முதலமைச்சர், துணை அமைச்சர் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர். தொடர்ந்து காவல்துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், ஆளுநர் இல்லம் சென்றார். அங்கு அவரை 6 குதிரை வீரர்கள் அணி வகுத்து அழைத்துச் சென்றனர். இன்று காலை 9:30 மணி அளவில் நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநராக பன்வாரி லால் ப்ரோஹித் பொறுப்பேற்க உள்ளார்.