Breaking – சசிகலாவுக்கு 5 நாள் பரோல்

66

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு இன்று பரோல் வழங்கப்பட்டது. சுமார் 7 மாத சிறை வாசத்திற்கு பிறகு அவருக்கு 5 நாள் பரோல் வழங்கி கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக பெங்களூர் சென்ற டிடிவி தினகரன் சசிகலாவுடன் சந்தித்தார். இளவரசியின் மகன் விவேக், அவரது மனைவி கீத்தனா ஆகியோரும் சசிகலாவை சந்தித்தனர். சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரை சந்திக்க வேண்டி பரோல் கேட்டு சசிகலா மனு அளித்திருந்தார்.

15 நாட்கள் பரோல் கேட்ட நிலையில் 5 நாட்கள் மட்டும் பரோல் வழங்கி கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளி வந்திருப்பது மேலும் பரபரப்பை கூடியுள்ளது.