டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை

174

டெல்லியின் முக்கியமான பகுதியானது ஜந்தர் மந்தர். பல போராட்டங்கள், தர்ணா இங்குதான் நடைபெறும். தமிழக விவசாயிகள் பலர் வெகுநாட்கள் இங்கே போராட்டங்கள் நடத்தியதும்கூட குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையிலே பசுமை தீர்ப்பாயத்தில், ஜந்தர் மந்தரில் அடிக்கடி நடக்கும் போராட்டங்களினால் சில இடையூறுகள் நிகழ்கின்றது என்று சிலர் புகார் அளித்திருந்தனர்.

இந்தநிலையில், ஆர்.எஸ். ரதோர் தலைமையிலான தேசிய பசுமை தீர்ப்பாயம் அடிக்கடி இங்கு போராட்டங்கள் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி ” போராட்டக்காரர்களை எல்லாம் ராம்லீலா மைதானத்திற்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும். டெல்லி அரசு, டெல்லி மாநகராட்சி, போலீஸ் கமிஷனர் ஆகியோர் பொறுப்பேற்று உடனடியாக போராட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.