லைகா நிறுவனத்தில் ரெய்டு

174

சென்னை தி.நகரில் உள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகாவின் தலைமையகத்தில், தற்போது ரெய்டு நடந்து வருகின்றது. ஜி.எஸ்.டி புலனாய்வுப்பிரிவினர் சோதனையை மேற்கொண்டிருக்கின்றனர்.

லைகா தயாரிப்பில் இந்த ஆண்டு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ‘கைதி நம்பர் 150’, விஜய் ஆண்டனி நடித்த ‘எமன்’ படம் ரிலீஸ் ஆனது. இதனை தொடர்ந்து, இந்நிறுவனத்தின் தயாரிப்பு பட்டியலில், ரஜினியின் ‘2.0’, கமல் ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’, உதயநிதியின் ‘இப்படை வெல்லும்’, சாய் பல்லவியின் ‘கரு’, நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில், வரியில் முறைகேடு செய்துள்ளதாக லைகா மீது எழுந்த புகாரை தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று ஜி.எஸ்.டி புலனாய்வுப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.