சிம்புவின் இசையில் முதல் பாடல் வெளியானது

174

சக்க போடு போடு ராஜா படத்திற்காக முதன்முதலாக, சிம்பு இசையமைத்துள்ள படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

காமெடி நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம், சக்க போடு போடு ராஜா. இதில், நாயகியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார், சேதுராமன் இயக்கியுள்ளார்.

நடிகர் சிம்பு இந்த படத்தின் மூலம் இசையமைப்பளாராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். சிம்புவின் இசையில், அனிருத் பாடியுள்ள ’கலக்கு மச்சான்’ எனத் தொடங்கும் என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர்.

பல சர்ச்சைகளை உருவாக்கிய; பீப் பாடலுக்குப் பிறகு சிம்புவும், அனிருத்தும் இந்தப் பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளனர்.

நடிகர் சிம்புவும், காமெடி நடிகர் சந்தனமும் நெருங்கிய நண்பர்கள். மன்மதன் படத்தின் வாயிலாக, சந்தனத்தை திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தியதே சிம்பு தான். ஆகவே, சந்தானம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சக்க போடு போடு ராஜா படத்துக்கு இசையமைக்க சம்மதித்தார் சிம்பு.