ரூ 750 கோடி நிவாரணம் ஒதுக்கீடு : தமிழக அரசின் முன்னேற்பாடு

1372

தமிழக அரசு, வடகிழக்கு பருவமழையால் பேரிடர் ஏற்பட்டால் அதனை சமாளிக்க, முன்னெச்சரிக்கையாக ரூபாய் 750 கோடியை, நிவாரண தொகையாக ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழக்தை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக, வருடத்தின் கடைசியில் ஏதேனும் ஒரு பேரிடர் நடந்த வண்ணம் உள்ளது. 2016 டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழைவெள்ள பேரிடர் தமிழக மக்கள் மறக்க முடியாத வண்ணம் வரலாற்று சுவடாக அரங்கேறியது.

இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை காலம் வருவதால், அதனால், ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்போதே தமிழக அரசு 750 கோடி ரூபாய் நிவாரணம் ஒதுக்கியுள்ளது.

மேலும், அனைத்து மாவட்ட ஆட்சி அலுவலகங்களும், காவல் துறை, மருத்துவ உதவி வரை அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘தமிழகத்தில் இந்த மாதத்தில் இரண்டு புயல்கள்’ உருவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியால் மக்கள் பீதி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து வானிலை ஆய்வு மைய அதிகாரி இந்த தகவல் தவறானது என்றும் தமிழகத்தில் இப்போதைக்கு புயல் வர வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருந்த நிலையில், தமிழக அரசின் இத்தகைய முன்னேற்பாடு மக்களை மேலும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.