நடிகர் ஜெய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

73

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜராகாத நடிகர் ஜெய்க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது.

கடந்த மாதம் 20ந்தேதி இரவு நடிகர் ஜெய் மேலும் இரண்டு நடிகர்களோடு சென்னையில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது ஆடி காரில் வீடு திரும்புகையில், போதையில் அதிவேகமாக காரை ஓட்டி சென்றுள்ளார். தாறுமாறாக ஓடிய கார் அடையாறு மலர் மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதுசம்பந்தமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ஜெய் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில், குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நடிகர் ஜெய்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகர் ஜெய்க்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.