நீதிமன்றத்தில் சரணடைந்தார் நடிகர் ஜெய்

138

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நடிகர் ஜெய் கடந்த மாதம் 21ந்தேதி சென்னை அடையார் மேம்பாலத்தில் செல்லும் போது அவருடைய கார் தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதியுள்ளது. பின்னர் போக்குவரத்து காவலர் சோதித்து பார்க்கையில் அவர் குடித்து விட்டு கார் ஓட்டியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு நடிகர் ஜெய் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் நடிகர் ஜெய் நீதிமன்றத்தின் முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜராகாததால் அவரை 2 நாட்களில் கைது செய்ய வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று நடிகர் ஜெய் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக சரணடைந்தார்.