தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

106

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “தெலுங்கானா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நிலக்கோட்டையில் மதுரை மாவட்டம் சித்தாம்பட்டியில் 6 செமீ, 7 செமீ மழையும், தாமரைபாக்கத்தில் 5 செமீ என மழை அளவு பதிவாகியுள்ளது” என்றார்.