சென்சார் முடிந்தது; ‘மெர்சல்’ தீபாவளி உறுதி

123

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே. சூர்யா என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ள மெர்சல் படத் தலைப்பின் மீதான தடையை, சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. இதைத் தொடர்ந்து, மெர்சல் பெயரை பயன்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் படக்குழுவிற்கு அனுமதி கிடைத்துள்ளது. மேலும், படத்தின் தணிக்கை முடிந்து, மெர்சல் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் அறிவித்த படி, தீபாவளி அன்று படம் நிச்சயம் வெளியாகும் என உறுதி செய்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கம் இந்த வார இறுதியில் எந்த படத்தையும் வெளியிட வேண்டாம் என முடிவு செய்ததனால், அடுத்த வாரம் பல படங்கள் வெளியாகின்றன. இதனால், மெர்சலுக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.