கடற்கொள்ளையரிடமிருந்து கப்பலை மீட்ட இந்தியக் கடற்படை

102

இந்திய நாட்டின் சரக்கு கப்பலான ‘ஜக் ஆமர்’, ஏதன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்தபோது, அதை சோமாலிய கடற்கொள்ளையர்கள் அதிவேகமாகச் செல்லக்கூடிய சிறிய ரக படகுகளில் வந்து சுற்றி வளைத்து அதனைக் கைப்பற்ற முயற்சி செய்தனர். இந்நிலையில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பலான ஐ.என்.எஸ் திரிசூல் தலையிட்டு கடத்தல் முயற்சியை மிக அதிரடியாக முறியடித்து இருக்கிறது.

இந்திய கடற்படைக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கே சென்ற ‘மார்கோஸ்’ என்கிற சிறப்புப் படையைச் சேர்ந்தவர்கள், சுமார் ஐந்து மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் கொள்ளையர்களிடம் இருந்து அதை தடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் கடற்கொள்ளையரிடமிருந்து, ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடிய வகையைச் சேர்ந்த சிறிய படகுகள், ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, ஏணிகள், சிறு நங்கூரங்கள் மற்றும் எரிபொருள் கொள்கலன்கள் ஆகியவற்றை இந்தியக் கடற்படையில் இருந்த வீரர்கள் கைப்பற்றினார்கள். 2008 முதல், இது போல இந்திய கடற்படை அங்கு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.