நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா

622

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா இன்று சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூரு பரப்ப அகரஹார சிறையில் தண்டனை பெற்று வருகிறார் சசிகலா. இந்நிலையில், அவருடைய கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள காரணத்தால் தற்போது 5 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார்.

இன்று நடராஜன் சிகிச்சை பெற்று வரும் சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்கு சசிகலா சென்றுள்ளார். அவர் செல்லும் வழியெல்லாம் அவருடைய தொண்டர்கள் வரவேற்பு அளித்த வண்ணம் இருந்தனர். இதைத்தொடர்ந்து சற்றுமுன் மருத்துவமனை வந்த அவர், அங்கு அவருடைய கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

சசிகலா வந்துள்ளதால் மருத்துவமனை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.