பெட்ரோல் பங்குகள் அக்டோபர் .13ம் தேதி வேலை நிறுத்தம்

104

தினசரி பெட்ரோல் டீசல் விலையில் மாறுதல் செய்வதை எதிர்த்து வருகிற 13ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தினசரி நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் டீசல் விலை அறிவிப்பு முறையை எதிர்த்தும் பெட்ரோல், டீசலை எடுத்துச் சென்று நேரடியாக வீட்டிலேயே விநியோகம் செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும்வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த முடிவினை அரசு பரிசீலிக்காவிட்டால் 27ம் தேதியில் இருந்து தேதி குறிப்பிடப்படாத காலவரையற்ற வேலை நிறுத்தத்திலே ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். நாளை நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதுமுள்ள 54000 பெட்ரோல் விற்பனையாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.