சசிகலா பரோல் கெடுபிடியில் உள்நோக்கமெல்லாம் இல்லை – எம்.பி மைத்ரேயன்

100

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா நேற்று அவரது கணவரை பார்க்க அனுமதிக்கப்பட்டு பயங்கர கெடுபிடிகளுடன் ஐந்துநாள் சிறை விடுவிப்பில் வெளியிலே வந்தார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. மேல்சபை எம்.பியான மைத்ரேயன் இதுகுறித்து இன்று காலையில் பத்திரிகையாளர்களிடம் பேசினார். பரோலில் உள்ள கடுமையான நிபந்தனைகள் குறித்து கேட்டபோது, “தனிப்பட்ட காரணத்துக்காக சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

அவருக்குச் சில நிபந்தனை விதிக்கப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. தற்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலைக்காக மட்டுமே சசிகலாவுக்கு நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது. அவர் பரோலில் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவது இல்லை” என்றார்.