நாடு முழுவதும் வாராக்கடன் தொகை ரூ.9.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு

126

நாடு முழுவதும் வாராக்கடன் தொகை ரூ.9.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடன் அளிக்கப்பட்டு திருப்பி செலுத்த முடியாத தொகையான வாரக்கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வாராக்கடன் பிரச்னையால் வங்கிகள் பணத்தை திரும்ப பெற முடியாமல், பணப்பற்றாக்குறை நிலைமையை சமாளித்து வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்பதால் வாரக்கடனை திரும்ப பெறும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பேரில் அனைத்து வங்கிகளும் ஈடுபட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வாராக்கடன் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ரிசர்வ் வங்கி அளித்த தகவலின் அடிப்படையில், கடந்த 2017 ஜூன் மாதம் வரையில் சுமார் 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வாராக்கடன் இருப்பது தெரியவந்துள்ளது. 2017 ஜனவரி மாதம் முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் மட்டும் வங்கியில் உள்ள வாராக் கடன்களின் அளவு 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக 11 மாநிலங்களில் மட்டும் ரூ.98,000 கோடி வராக் கடனாக உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.