அரசு ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு

93

அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 30% ஊதிய உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை வைத்து இந்த முடிவெடுத்துள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இனி அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.6,100-ல் இருந்து ரூ.15,700 என்றும் அதிகபட்ச சம்பளம், 77,000 ரூபாயிலிருந்து, 2,25,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.