ஓபிஎஸ் & கோ டெல்லி பயணம்

100

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் புதுடெல்லி செல்கிறார். அங்கு அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் அலுவலகம் அதற்கு பதிலளிக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், இந்த சந்திப்பு நாளை நிகழ உள்ளதாக தெரிகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்-கும் இடையே உறவு மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் சமீபத்தில் கூறப்பட்டது. முதல்வருக்கு இணையான மரியாதை ஓபிஎஸ்-க்கு கிடைக்காததே அவரின் அதிருப்திக்கு காரணம் என பேச்சுக்கள் நிலவி வந்தன. இந்த நிலையில், பிரதமரை நாளை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சந்திக்க கிளம்பியுள்ளதால், கட்சி மீண்டும் உடையுமோ என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன.