எங்கே எப்போது பட்டாசு வெடிக்கலாம்…

100

சென்னை பெருநகரில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குறித்து நேற்று காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பட்டாசு வெடிப்பது தொடர்பான பல்வேறு அறிவுரைகளையும் வழங்கி உள்ளது.

அந்த அறிவிப்பில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி சென்னை மாநகரில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம். 125 டெசிபலுக்கு மேல் ஒலி அளவு மற்றும் பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டர் தொலைவுக்கு அப்பால் வெடிச் சத்தம் கேட்கும் பட்டாசுகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், எரிபொருட்கள் சேமித்து வைக்கும் இடங்கள், சாலைப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. பட்டாசுக் கடை அருகே புகை பிடிக்கவோ, பீடி, சிகரெட் துண்டுகளை வீசவோ கூடாது. வாடிக்கையாளர்களைக் கவர, மற்ற பட்டாசு கடைகளுக்குப் போட்டியாக, கடையின் அருகிலேயே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

குறிப்பாகப் பட்டாசு கடைக்காரர்கள் தங்கள் கடையில் மெழுகுவர்த்தி, சிம்னி போன்றவற்றை வைத்திருக்கக் கூடாது. குடிசை பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ராக்கெட் போன்றவற்றை வெடிக்கக் கூடாது. விலங்குகள் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது. குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பின் கீழ் பட்டாசு வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.