தமிழக மீனவர்கள் 8 பேரைக் கைது செய்தது இலங்கை கடற்படை

705

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்கள் படகு ஒன்றில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

தனுஷ்கோடி – மன்னார் கடல் பகுதியில் இன்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களைக் கைது செய்தது.

அவர்கள் படகையும் கடற்படை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.