வெள்ளை மாளிகையில் முதல் முறையாக தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

71

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் முதல் முறையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த காலத்திலிருந்து வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து இந்த வருடமும் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த தீபாவளி பண்டிகையில், அதிபர் டிரம்ப், அமெரிக்காவிற்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே, அமெரிக்க தொலை தொடர்பு குழு தலைவர் அஜித் பை, அதிபரின் முதன்மை துணை பத்திரிகை செயலர் ராஜ் ஷா மற்றும் மூத்த அமெரிக்க-இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகை குறித்து டிரம்ப் கூறியதாவது, “இந்த பண்டிகை நேரத்தில் இந்திய மக்களை நினைவு கூர்கிறோம். இந்துக்களின் தாயகமான இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடியுடன் எனக்கு சிறந்த திடகாத்திரமான நட்பு இருந்து வருகிறது. அமெரிக்க அதிகாரிகளாக உள்ள இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடுவதில் நான் பெருமைப்படுகிறேன்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் நமது நாட்டிற்காக ஏராளமான பணிகளை செய்துள்ளனர். கல்வி, அறிவியல், மருத்துவம், வணிகள், கல்வி ஆகிய துறைகளில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தைரியமாக நாட்டை பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்திய மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.