ரொஹிங்கியாக்களை இனப்படுகொலை செய்தது மியான்மர்: அம்னெஸ்டி

126

மியான்மரில் ரொஹிங்கியா இன மக்களை அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டு கொலை செய்வதாகவும், அவர்கள் வாழும் கிராமங்களை அழித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றனர். இதனால், லட்சக்கணக்கான ரொஹிங்கியா இன மக்கள், வங்கதேசம், இந்தியா போன்ற அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

மியான்மர் அரசு இதுதொடர்பாக, எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது. ராணுவத்தினர் எந்த தவறும் செய்யவில்லை என அந்நாட்டுத் தலைவர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், சர்வதேச மனித உரிமை ஆர்வல அமைப்பு ஆம்னெஸ்டி, மியான்மர் ராணுவத்தினர் திட்டமிட்டே நூற்றுக்கணக்கான ரொஹிங்கியா இன மக்களை கொலை செய்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச நாடுகளின் மத்தியில் மியான்மர் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.