ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும்: நிக்கி ஹாலே

445

ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகளில் அமெரிக்காவுக்கு உறுதுணையாக இந்தியா இருக்க வேண்டும் என ஐ.நா.விற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-இந்திய நட்புறவு கவுன்சில் நடத்திய நிகழ்ச்சியில் ஐ.நா.விற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “தெற்கு ஆசியா முழுவதும் பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக பாகிஸ்தானுக்கு எதிரான கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவுக்கு, ஒரு காலத்தில் பாகிஸ்தான் சிறந்த நட்பு நாடாக இருந்தது. அதை நாங்கள் பாதுகாத்து வந்தோம். ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவாக எந்த நாடு செயல்பட்டாலும் அமெரிக்கா அதை எதிர்க்கும். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஏற்கனவே இந்தியா உதவி வருகிறது. தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகளில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவி புரிய வேண்டும். ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா எங்களுக்கு நட்பு நாடுகள்” என அவர் தெரிவித்துள்ளார்.