இஸ்லாமியர்கள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிரத் தடை

126

வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இஸ்லாமியர்கள் தங்களின் புகைப்படங்களைப் பகிர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் தாருல் உலூம் தேவ்பந்த் எனும் இஸ்லாமிய கல்வி நிறுவனமானது இந்த ஃபத்வாவை விதித்துள்ளது. புதன்கிழமை விதிக்கப்பட்டுள்ள இந்த ஃபத்வாவில், இஸ்லாமியர்கள் தங்கள் புகைப்படத்தையோ அல்லது தங்களின் குடும்பத்தாரின் புகைப்படத்தையோ சமூகவலைத்தளங்களில் பகிர கூடாது. பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர இஸ்லாமானது அனுமதி அளிக்கவில்லை.

சமீபத்தில் இஸ்லாமியர் ஒருவர், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்வது சரியா? இஸ்லாம் அதற்கு அனுமதிக்கிறதா? என தாருல் உலூம் தேவ்பந்த்திடம் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து ஆய்வு செய்த தாருல் உலூம் தேவ்பந்த்தின் ஃபத்வா பிரிவு, சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர இஸ்லாம் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்தே இந்தத் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் அலுவலகங்களில் ஒன்றாகச் சேர்ந்து பணி புரிய தாருல் உலூம் தேவ்பந்த் ஃபத்வா விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.