பாலியல் தொல்லைக்கு ஆளான ராதிகா சரத்குமார்!

110

தான், பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சினிமா வாய்ப்புக்காக நடிகைகளிடம் அத்துமீறும் மோசமான கலாச்சாரம் இந்திய திரையுலகம் முழுக்க பரந்து விரிந்து கிடப்பதாக பிரபலமான நடிகைகளே பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை நடிகைகள் தற்போது வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர்.

இதைப் பார்த்த பிற நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு Me too என்ற டேக்கை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறி Me too என்று ட்விட்டரில் தெரிவித்து அதிரவைத்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். அவரின் இந்த ட்விட்டர் பதிவைப் பார்த்து சிலர் அதிர்ச்சியாகியுள்ளனர்.

அந்த அதிர்ச்சி மாறாமல், “என்னது உங்களுக்கு பாலியல் தொல்லையா? அதிர்ச்சியாக உள்ளது!” என்று சில ரசிகர்கள் ராதிகா சரத்குமாரிடம் கேட்டுள்ளனர். மேலும், “நீங்கள் ஒரு ஃபிலிம் ஸ்டார், உங்களுக்கு யார் பாலியல் தொல்லை கொடுப்பது?” என்று பலரும் ராதிகாவிடம் கேட்டுவருகின்றனர். ஆனால், ராதிகாவிடமிருந்து இதற்கு எந்த பதிலும் இல்லை.

“உங்களுக்கு இப்போது பவர் உள்ளது. அவர்களின் பெயரை தெரிவித்து அசிங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அமைதியாக இருப்பதால் அவர்கள் தனது செயலை தொடரக்கூடும்!” என்று பலர் கமெண்ட் போட்டுள்ளனர்.