டிடிவி தினகரனுக்கு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்

83

டிடிவி தினகரனுக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தினகரன் இன்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகினார். விசாரணைக்கு முன்பே அமலாக்கத்துறையிடம் தன்னிடம் கேட்கக்கூடிய கேள்விகளை தர வேண்டும் என தினகரன் கேட்டுள்ளார்.

இன்றைய விசாரணையில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இதுகுறித்து கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவருக்கு கேள்விகளை முன்கூட்டியே சொல்ல வேண்டும் என்பது நீதிக்கு எதிரானது. இந்த கேள்விகளை தான் கேட்கவேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர் சொல்ல கூடாது. சிவில் நீதிமன்றத்தை போல் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு உரிமையில்லை. விசாரணையின் போதே உங்களுக்கான கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் உடனடியாக அதற்கு பதில் சொல்ல வேண்டும்” எனக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.