தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

91

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு இன்று காலை முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை, ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பசும்பொன்தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று முத்துராமலிங்க தேவருக்கு குருபூஜையானது நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மதுரை கோரிபாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

சிலைக்கு கீழே இருந்த அவரின் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், ஓ.எஸ் மணியன் ஆகியோரும் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனை தொடர்ந்து முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பசும்பொன் புறப்பட்டு சென்றனர்.