சென்னையில் கனமழை – பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

341

சென்னையில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கி இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையானது வெளுத்து வாங்குகிறது.

அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளில் மழையானது விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சேகரமாக துவங்கி உள்ளது. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளதால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனிடையே சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு வாரத்திற்கு இது போல் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.