ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறக்கப்பட்டதன் காரணம் இதுதான்!

129

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து மும்பை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது.

இன்று அதிகாலை டெல்லியில் இருந்து மும்பை வந்து தரையிறங்க வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசர அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமான பயணிகள் அனைவரிடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. விமானத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவசரமாக விமானம் தரையிறக்கப்படத்திற்கான காரணத்திற்கு விமானத்தில் உள்ள கழிவறையில் கிடைத்த கடிதம் ஒன்று தான் காரணமாம்! அதில் எழுதப்பட்டதாவது, “விமானத்திற்குள் கடத்தல்காரர்கள் 12 பேர் உள்ளனர். விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீருக்கு உடனடியாகத் திருப்ப வேண்டும். வேறு எங்கும் விமானத்தைத் தரையிறக்கினால், பயணிகள் ஒவ்வொருவராக உயிரிழக்கும் சத்தத்தை கேட்க நேரிடும். இதை சாதாரண நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும் விமானத்திற்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” என இருந்தது.

இந்த கடிதத்தினால் தான் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பயணிகளிடம் விசாரணை நடத்திய பிறகு அந்த விமானத்தில் வந்த பயணி சல்ல பிர்ஜு என்பவன் தான் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளான் என தெரிய வந்தது. அவனை தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளான். அவனுக்கு தண்டனை கொடுப்பதற்கு முன்பாக முதலில் அவனுக்கு வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் படி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.