மணிப்பூர் எல்லைப்பகுதி குண்டுவெடிப்பில் 2 ராணுவ வீரர்கள் பலி

86

இன்று மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் ஒரு குண்டு வெடித்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வீரர்கள் மரணமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்ட பகுதியில் இன்று அதிகாலை இந்திய ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சக்தி வாய்ந்த IED வகை குண்டு வெடித்தது. இதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். மேலும் 7 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல் கடந்த ஜூன் 30ல் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் 3 வீரர்கள் காயமுற்றனர். மேலும் அதே ஜூன் மாதம் 15ம் தேதி நடந்த ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு வீரர் கொல்லப்பட்டார், 4 பேர் காயமடைந்தனர்.  கடந்த சில மாதங்களாக மணிப்பூர் எல்லைப்பகுதியில் இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.