ஈரான் – ஈராக் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலி

117

ஈரான் – ஈராக் எல்லை பகுதி அருகே நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுகத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஈராக் எல்லையில் அமைந்துள்ள ஹலப்ஜா எனும் நகரில் நேற்று இரவு 11:48 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 23.2 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 7.3-ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்த இதனை தொடர்ந்து 11:59 மணி அளவில் ஹலப்ஜா நகரில் இருந்து 45 கி,மீ தொலைவில் மற்றொரு இடத்தில் நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. 5.3 ரிக்டர் அளவு சக்தி கொண்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதே போல் இன்று அதிகாலை 3:30 மற்றும் 5:50 மணி அளவில் ஈரானின் இரு வேறு இடங்களில் 4.5 ரிக்டர் அளவுள்ள இரண்டு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஈரானில் மட்டும் சுமார் 100 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இரு நாட்டு தரப்பிலும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிலநடுக்கத்திற்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் அதிகமான மக்கள் இதில் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான், துருக்கி, குவைத், லெபனான் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம்  உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனடா பிரதமர் ஜஸ்டின் ஈரான் – ஈராக் மக்களுக்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.