தமிழகத்தில் மேலும் இரண்டு நாள் மழைக்கு வாய்ப்பு

83

வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், இன்றும், நாளையும்(நவ.,22, 23) மழை பெய்யலாம்’ என எதிர்பார்க்கப் படுகிறது. இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை “இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, அரபிக் கடலில் இருந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை பரவியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும்(நவ.,22, 23)  தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளாவை ஒட்டிய பகுதிகளில் கன மழையும், மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்யலாம்” என ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.